/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இது மாணவர்களுக்காக... கைபேசியில் கரைந்து போகும் நேரம்
/
இது மாணவர்களுக்காக... கைபேசியில் கரைந்து போகும் நேரம்
இது மாணவர்களுக்காக... கைபேசியில் கரைந்து போகும் நேரம்
இது மாணவர்களுக்காக... கைபேசியில் கரைந்து போகும் நேரம்
ADDED : ஜன 14, 2024 11:34 PM

மேட்டுப்பாளையம்;சிறுமுகையில், ஆறுக்குட்டி கவுண்டர் நினைவு அறக்கட்டளை சார்பில் இயங்கும் அம்பாள் பள்ளிகளின் 15வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளியின் செயலர் கீதா பழனிசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை வழிகாட்டி சசிகுமார் சாம்ராஜ், பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். பள்ளி முதல்வர் திருமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்திய விமானப் படையின் தலைவர் மோனிகா பிஜ்லானி, மாணவ, மாணவியருக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி, மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசினார்.
* மாணவ, மாணவியர் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தீர்மானித்தல் உட்பட பல விஷயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* தங்கள் உடல் நலனில் போதிய அக்கறை செலுத்த வேண்டும்.
* தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதில், மாணவர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். இது, பாதிப்பை ஏற்படுத்தும். இதை தவிர்த்து, வாசிப்பு திறனை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நண்பர்களாக மட்டும் இருப்பதைவிட, சிறந்த பெற்றோராக கண்டிப்புடன் இருந்தால் தான், நல்ல பிள்ளைகளை உருவாக்க முடியும்.
* பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் முன் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்.
* ஆசிரியர்கள் இல்லையென்றால், வாழ்வில் அர்த்தம் இல்லாமல் போயிருக்கும். எனவே, ஆசிரியர்களை எந்த காலத்திலும் வணங்க வேண்டும்.
* மாணவர்கள் அதிகளவில் ராணுவத்தில் சேர்ந்து, இந்த தேசத்துக்கு பணியாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மாணவர்களை தேர்வில் சாதிக்க வைத்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர், ஆசிரியர் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பள்ளி செயலர் கீதா பழனிசாமி நன்றி கூறினார்.