/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 20ல் ஜமாபந்தி ஏற்பாடுகள் விறுவிறு
/
வரும் 20ல் ஜமாபந்தி ஏற்பாடுகள் விறுவிறு
ADDED : மே 18, 2025 12:24 AM
கோவை : கோவை மாவட்டத்தில், 1434 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி, வருவாய் தீர்வாயக்கணக்கு முடிவு பற்றிய நிகழ்ச்சி, வரும் 20ல் துவங்கி 28ல் நிறைவடைகிறது.
இதற்கான பணிகளை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் அனைத்து தாசில்தார் அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் 1434 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி, வருவாய் தீர்வாயக்கணக்கு முடிவுகளை சரிபார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா, நிலஅளவை, ஜாதிச்சான்று, வருவாய்சான்று,
முதியோர் உதவித்தொகை, மகளிர் ஊக்கத்தொகை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக, கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகாக்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் வரும் 20ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கும் ஜமாபந்தி, 28ம் தேதி மாலை நிறைவுபெறுகிறது.
இந்த ஜமாபந்திக்கான விரிவான ஏற்பாடுகளை, வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.