ADDED : மார் 14, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கு.வடமதுரை கோட்டம், சின்னத்தடாகம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, மாரியம்மன் கோவில், தடாகம், ஆனைகட்டி மற்றும் கோபனாரி சுற்றுப் பகுதிகளில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு நடத்தவில்லை.
இப்பகுதி மின் நுகர்வோர், ஜனவரியில் செலுத்திய மின் கட்டணத்தையே மார்ச் மாதத்துக்கும் செலுத்தலாம் என கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
