ADDED : அக் 25, 2024 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்: கோவில்பாளையம் அருகே விசுவாசபுரத்தை சேர்ந்தவர் ராஜன் மனைவி மீனா குமாரி, 52. இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது பேத்தியை அழைத்து வர நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர், மீனாகுமாரியின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்துள்ளார். மீனாகுமாரி செயினை கையால் பிடித்துள்ளார். பாதி அறுந்த நிலையில் மீதி தங்க செயினுடன் மர்ம நபர் தப்பி சென்று விட்டார். கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.