/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளை
/
பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளை
ADDED : செப் 02, 2025 09:37 PM
கோவை; சரவணம்பட்டி, சிவானந்தபுரம், ஜனதா நகரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன், 52; பெயின்ட்டிங் கான்ட்ராக்டர். சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். நேற்று முன்தினம் கோவை திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டு கப்போர்டில் இருந்த வைர மோதிரம், தங்க பிரேஸ்லெட், தங்கச்சங்கிலிகள் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி குங்குமச்சிமிழ், சாமி தாலி மற்றும் வெள்ளி பாத்திரங்கள், பணம் ரூ.7,000 திருட்டு போயிருந்தன.
மொத்தம் 6 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தன. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.