ADDED : மே 20, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆச்சிபட்டி போஸ்டல் காலனியை சேர்ந்த காளிதாஸ்,80, என்பவரின் மனைவி சாந்தகுமாரி,75. இருவரும், வீட்டின் முன் நேற்றுமுன்தினம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், குடிக்க குடிநீர் வேண்டுமென கேட்டுள்ளார்.
சாந்தகுமாரி தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் செல்ல முற்பட்ட போது, பைக்கில் அமர்ந்திருந்த நபர், அவரது கழுத்தில் இருந்த, மூன்று சவரன் நகையை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடுகின்றனர்.