/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் அதிகாரி என மிரட்டல் ஜார்க்கண்ட் மாநில நபர் சிக்கினார்
/
போலீஸ் அதிகாரி என மிரட்டல் ஜார்க்கண்ட் மாநில நபர் சிக்கினார்
போலீஸ் அதிகாரி என மிரட்டல் ஜார்க்கண்ட் மாநில நபர் சிக்கினார்
போலீஸ் அதிகாரி என மிரட்டல் ஜார்க்கண்ட் மாநில நபர் சிக்கினார்
ADDED : ஏப் 07, 2025 01:31 AM
கோவை: டில்லி கிரைம் பிரான்ச் அதிகாரி எனக்கூறி, பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோட்டைச் சேர்ந்த பியூலா அண்ண மரியாள், 50. இவரது கணவர் இமானுவேல், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
சில தினங்களுக்கு முன் பியூலா அண்ணமரியாள் வீட்டிற்கு வந்த 45 வயது நபர், தான் டில்லி கிரைம் பிரான்ச் போலீஸ் அதிகாரி என, கூறியுள்ளார். பியூலா அண்ணமரியாள் பெயரில் வெடிமருந்து தயாரிக்க பயன்படும் வேதியியல் பொருள் அடங்கிய பார்சல், இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மூன்று முறை பியூலாவின் வங்கி கணக்கில் இருந்து, இலங்கைக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். பியூலாவை கைது செய்ய வாய்ப்புள்ளதால், அதை தடுக்க பணம் தர வேண்டும் என, மிரட்டினார்.
பியூலா, தன் உறவினர்களுக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த உறவினர்கள், அந்நபரிடம் விசாரித்தனர். அவர் முறையாக பதில் அளிக்காததால், கோவை ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விசாரணையில், அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அகஸ்டின் பிஜு, 45, என, தெரிந்தது.தேசிய குற்றப்புலனாய்வு ஏஜென்சி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டையை பயன்படுத்தி அவர் மிரட்டியுள்ளார்.
சிங்காநல்லுாரில் தங்கி, வேலை பார்த்து வரும் தம்பியை பார்க்க வந்த பிஜு, பணம் பறிக்க முயன்றுள்ளார். பிஜுவை போலீசார் சிறையில் அடைத்தனர்.

