/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலை இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
/
வேலை இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
ADDED : அக் 03, 2024 12:09 AM
கோவை : எட்டு, பத்து, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்து விட்டு, வேலையின்றி இருப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்தும், எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத இளைஞர்களுக்கு, மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மனுதாரரின் குடும்ப ஆண்டு வருவாய், 72,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை. மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை, தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். உதவித்தொகை பெறும் காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து, புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.
https://employmentexchange.tn.gov.in/ என்ற இணையதளத்திலிருந்தோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ, அல்லது நேரிலோ விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.