UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 11:45 PM
கோவை: கோவை அருகே சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், வரும் 16ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
கோவை, சூலுார் அருகே, 10 வயது சிறுமி, கடந்த மே, 21ம் தேதி காணாமல் போனார். போலீசார் தேடிய நிலையில் கண்ணாம்பாளையம் அருகேயுள்ள குளம் அருகே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். விசாரணையில், சிறுமி வசித்த பகுதியில், குடியிருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக்,33, என்பவர் சிறுமியை பைக்கில் கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொன்றது தெரிந்தது.
கார்த்திக் மற்றும் உடந்தையாக இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்,31, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் துரிதமான விசாரணை நடத்தி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில், இ–பைலிங் வாயிலாக ஜூன், 10 ல், 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜூன், 15ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, ஜூன் 24ல் சாட்சி விசாரணை துவங்கியது. ஆக. 18ல் சாட்சி விசாரணை முடிந்தது. தொடர்ந்து இரு தரப்பு வாதம் நடந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது எழுத்துப்பூர்வ இறுதி வாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில், வரும் 16ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி ஹரிகரன் அறிவித்தார்.
