/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ்சில் 'கடி' பயணிகள் அவதி
/
அரசு பஸ்சில் 'கடி' பயணிகள் அவதி
ADDED : பிப் 01, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவையிலிருந்து ஈரோடு செல்லும் நெடுந்துார அரசு பஸ்ஸில், மூட்டை பூச்சி தொல்லை தாங்கமுடிவதில்லை என்று, பயணிகள் குமுறுகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், கோவையிலிருந்து அன்றாடம் ஈரோடு வரை, பாயின்ட் டூ பாயின்ட் பஸ் எண்: டி.என்.,33என் 3328 என்ற பஸ்சை இயக்குகிறது. பராமரிப்பு மிகவும் மோசம். இதனால், இருக்கைகளில் ஏராளமான மூட்டை பூச்சிகள் கொத்துக்கொத்தாக உள்ளன.
பயணிகளை கடித்து துன்புறுத்துகின்றன. இதை, வீடியோ எடுத்து போக்குவரத்துக்கழக பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ளனர் பயணிகள். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.