/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவிக்கு காமராஜர் விருது
/
அரசு பள்ளி மாணவிக்கு காமராஜர் விருது
ADDED : மார் 13, 2026 06:20 AM

கோவை: கல்வி, விளையாட்டு, தனித்திறன் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும், காமராஜர் விருது வழங்கப்படுகிறது. ஒண்டிப்புதுார், ரா.செ.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த கனிகா ஸ்ரீ என்ற மாணவிக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் விருதும், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவி பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதோடு என்.எம்.எஸ்.எஸ்., தமிழ் திறனறித்தேர்வு, திறனாய்வுத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளிலும் வெற்றி பெற்றுள்ளார். பேச்சுப்போட்டி, வினாடி - வினா போன்ற பல்வேறு தனித்திறன் போட்டிகளிலும் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார். மாணவியை தலைமையாசிரியர் நந்தினி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

