/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமராஜர் பிறந்த நாள் விழா; பள்ளிகளில் கோலாகலம்
/
காமராஜர் பிறந்த நாள் விழா; பள்ளிகளில் கோலாகலம்
ADDED : ஜூலை 15, 2025 08:50 PM

கோவை; காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் உள்ள பள்ளிகளில் நேற்று (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழக அரசு, காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்திருந்தது. அதன்படி, மாவட்டத்தின் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியம், நடனம், மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. காமராஜரின் கல்வி பணிகள் மற்றும் கல்விக்கான அவரின் பங்களிப்பு ஆகியவை நினைவுகூரப்பட்டன.
அவர் முன்னெடுத்த கல்வி முயற்சிகள், மாணவர்களுக்காக செய்த பணிகள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்துரைத்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, கல்வி உபகரணங்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.