/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா
/
அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 16, 2025 10:26 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில், அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மேட்டுப்பாளையம் சுதந்திராபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 130 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஊழியர் ஜெயராமன் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை மணிமலர் வரவேற்றார். அறிவொளி மணி, கிளை நூலக அலுவலர் கவுசல்யா ஆகியோர் காமராஜர் பற்றி பேசினர். விழாவில் பேச்சு, ஓவியம், கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியை திலகவதி நன்றி கூறினார்.
மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
விழாவுக்கு நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் தலைமை வகித்தார். காரமடை வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்கள் காமராஜர் பற்றி பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை நன்றி கூறினார்.
சிறுமுகை அடுத்த லிங்காபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, ஐந்து குழுக்களாக பிரிந்து, பேச்சு, கவிதை பாடல் போட்டிகளில் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற பாலை குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காமராஜர் வேடமணிந்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை கஜலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சிவக்குமார், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.