/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழிசை சங்கம் சார்பில் கம்பன் சொல்லரங்கம்
/
தமிழிசை சங்கம் சார்பில் கம்பன் சொல்லரங்கம்
ADDED : பிப் 11, 2025 11:43 PM
பொள்ளாச்சி; தமிழிசை சங்கம் மற்றும் கம்பன் கலை மன்றம் சார்பில் கம்பன் சொல்லரங்கம் நிகழ்வு, பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது. இலங்கை ஜெயராஜ் தலைமை வகித்தார். கவிஞர் சிற்பி முன்னிலை வகித்தார்.
முன்னதாக, தமிழிசை சங்கச் செயலாளர் சண்முகம் வரவேற்றாார். தொடர்ந்து, 'மெய்சிலிர்க்க வைக்கும் உறவு தந்தை -மகன் உறவே' என்ற தலைப்பில் கோவை கம்பன் கழகச் செயலாளர் முருகேசனும், 'கணவன்- மனைவி உறவே' என்ற தலைப்பில் ஆடிட்டர் தெய்வநாயகி, 'அண்ணன்- தம்பி உறவே'என்ற தலைப்பில் திருப்பூர் கம்பன் கழகச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். டாக்டர் ராமகிருஷ்ணன், கம்பன் கலை மன்ற துணைத் தலைவர் ரமேஷ், சிவக்குமார், கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

