தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பலாத்காரம் செய்ய முயன்ற காமுக பேராசிரியர் கைது

பலாத்காரம் செய்ய முயன்ற காமுக பேராசிரியர் கைது

பலாத்காரம் செய்ய முயன்ற காமுக பேராசிரியர் கைது


ADDED : நவ 13, 2024 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண், எம்.எஸ்சி., பட்டதாரி. இவர், கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

வேலைக்கு சேரும்போது, பெண்ணின் கல்விச் சான்றிதழை நிறுவனத்தினர் வாங்கி வைத்துக் கொண்டனர். தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பெண் வேலையை விட்டு நின்றுவிட்டார். பணிபுரிந்த நிறுவனத்தினர், பெண்ணின் கல்விச் சான்றிதழை கொடுக்க மறுத்து விட்டனர்.

இது குறித்து, கல்வீரம்பாளையம், முருகன் நகர் பகுதியில் வசிக்கும் கல்லுாரி பேராசிரியர் சிவபிரகாசம், 45, என்பவரிடம் அந்த பெண் கூறினார். சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட சிவபிரகாசம், 'சான்றிதழை வாங்கி வைத்துள்ளேன்' என கூறி, அந்த பெண்ணை கோவைக்கு அழைத்தார்.

அதை உண்மை என நம்பிய அப்பெண், நேற்று முன்தினம் சிவபிரகாசம் வீட்டுக்கு சென்றார். வீட்டில் சிவபிரகாசம் மட்டும் இருந்தார். அப்போது, அவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

உடனே அந்த பெண் அவரை கீழே தள்ளிவிட்டு, வீட்டின் குளியல் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்; அங்கிருந்தபடியே, தன் தோழியை தொடர்பு கொண்டு நடந்ததை அந்த பெண் தெரிவித்தார்.

மேலும், தான் இருக்கும் இடத்தின், லொக்கேஷனை, 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பினார். இது குறித்து பெண்ணின் தோழி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். வடவள்ளி போலீசார், அந்த பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

அங்கு சென்று, குளியல் அறையில் இருந்த பெண்ணை மீட்டனர். கல்லுாரி பேராசிரியர் சிவபிரகாசத்தை கைது செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us