/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரலில் கணீர் ... கருத்துக்களில் சுளீர்! 'தினமலர்' பேச்சுப்போட்டியில் மாணவர்கள் அசத்தல்
/
குரலில் கணீர் ... கருத்துக்களில் சுளீர்! 'தினமலர்' பேச்சுப்போட்டியில் மாணவர்கள் அசத்தல்
குரலில் கணீர் ... கருத்துக்களில் சுளீர்! 'தினமலர்' பேச்சுப்போட்டியில் மாணவர்கள் அசத்தல்
குரலில் கணீர் ... கருத்துக்களில் சுளீர்! 'தினமலர்' பேச்சுப்போட்டியில் மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜன 04, 2025 11:08 PM

கோவை: 'தினமலர்' நாளிதழ் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கணீர் குரலாலும், புதிய கருத்துக்களாலும், மாணவர்கள் அசத்தினர்.
'தினமலர்' நாளிதழ், இந்திய நீர்ப்பணிகள் சங்கம், 'எய்ம்' தன்னார்வு தொண்டு நிறுவனம் மற்றும் திருக்குறள் ஆய்வுக் கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நேற்று நடந்தது.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள், 'நீர் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பில் என்னுடைய நவீன சிந்தனைகள்' மற்றும் 'நீர் மற்றும் சுற்றுசூழல் மேலாண்மையில் நம்முடைய பங்கு' ஆகிய இரு தலைப்புகளில், வார்த்தைகளால் விளையாடினர்.
போட்டிகள், குனியமுத்துார் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, ஈச்சனாரி, ரத்தினம் கல்லுாரி, பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, பொள்ளாச்சி, பி.ஏ., கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்தன.
180 மாணவர்கள் பங்கேற்றனர். காலை 10:00 மணிக்கு போட்டிகள் துவங்கின. போட்டிக்கான முடிவுகள் ஒரு வாரகாலத்துக்குள் அறிவிக்கப்பட உள்ளன.
எட்டாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பிரிவில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, ரூ.7,000, இரண்டாம் பரிசாக, ரூ.5,000, மூன்றாம் பரிசாக, ரூ.3,000 வழங்கப்படும். பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 மாணவர்களுக்கான பிரிவில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, ரூ.7,500, மூன்றாம் பரிசாக, ரூ.5,000 வழங்கப்படும்.
வரும், பிப்., 1ம் தேதி பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா குனியமுத்துார், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லுாரி கருத்தரங்கக்கூடத்தில் நடக்க உள்ளது.