/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரிகளுக்கு இடையே கராத்தே வீரர்கள் ஆக்ரோஷமாக போட்டி
/
கல்லுாரிகளுக்கு இடையே கராத்தே வீரர்கள் ஆக்ரோஷமாக போட்டி
கல்லுாரிகளுக்கு இடையே கராத்தே வீரர்கள் ஆக்ரோஷமாக போட்டி
கல்லுாரிகளுக்கு இடையே கராத்தே வீரர்கள் ஆக்ரோஷமாக போட்டி
ADDED : ஆக 18, 2025 09:43 PM
கோவை; பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கராத்தே போட்டி, நேரு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
மாணவர்களுக்கான 'கட்டா' பிரிவில் நவீன், வினித் ஆகியோர் முதல் இரு இடங்களையும், சிவசூர்யா, அஜூத் ஆகியோர் மூன்றாம் இடங்களையும் பிடித்தனர்.
குமிட்டே, 50 கிலோவுக்கும் கீழ் பிரிவில், பிரேம் அருணாச்சலம், அஜூத் முதல் இரு இடங்களையும், நந்த கிருஷ்ணா, கிரிசுதன் மூன்றாம் இடங்களையும் பிடித்தனர்.
55 கிலோவுக்கு கீழ் ஆதித்யன், லீலா கிருஷ்ணன் முதல் இரு இடங்களையும், விஷ்ணு வரதன், பிரணவ் மூன்றாம் இடங்களையும் பிடித்தனர்.
தவிர, 60 கிலோவுக்கு கீழ், ஜெயபிரகாஷ், விஜய் ஆனந்த் முதல் இரு இடங்களையும், அப்துல் ஹாசன், நவீன் மூன்றாம் இடங்களையும் பிடித்தனர்.
67 கிலோவுக்கு கீழ், பிரனேஷ், அஷ்பக் அஷ்ரப் ஆகியோர் முதல் இரு இடங்களையும், ஹரி தர்சன், விக்னேஷ் ஆகியார் மூன்றாம் இடங்களையும் பிடித்தனர்.
75 கிலோவுக்கு கீழ், பரத், எம்.தர்ஷன் முதல் இரு இடங்களையும், மனோஜ்குமார், என்.கே.தர்ஷன் மூன்றாம் இடங்களையும் வென்றனர்.
84 கிலோவுக்கு கீழ், ஹரிபாபு, திலகவர்சன் முதல் இரு இடங்களையும், அஜித், ஆகாஷ் மூன்றாம் இடங்களையும் பிடித்தனர்.
நிப்டி மற்றும் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி தலா, 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
கோவை அரசு கலைக் கல்லுாரி, 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, 7 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.