/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செரயாம்பாளையத்தில் உருவாகிறது கார்த்திபுரம்
/
செரயாம்பாளையத்தில் உருவாகிறது கார்த்திபுரம்
ADDED : ஆக 31, 2024 11:34 PM
கோவை:கோவை, நீலாம்பூர், செரயாம்பாளையம் அருகில் அனைத்து வசதிகளும் கொண்ட, 200 ஏக்கர் பரப்பளவில் 2100 வீட்டு மனைகள் கொண்ட நகரம் உருவாகிறது.
இதன் அறிமுக விழாவில், நிறுவனர் கார்த்திகேயன் பேசியதாவது:
கோவை நீலாம்பூர் அருகே அனைத்து வசதிகள் கொண்ட தனிநகரமாக, கார்த்திபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அங்கீகாரமும், சுற்றுச்சூழல் சான்றும் பெறப்பட்டுள்ளது.
190 ஏக்கர் நிலப்பரப்பில் 2100 குடியிருப்புகள், வணிக வளாகம், மால், பள்ளி, விளையாட்டு மைதானம், 80 அடி ரோட்டில் கடைகள் அமைக்கப்படும்.
ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த நகருக்கு வர 14 வழிகள் உள்ளன. 80 அடி ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்சாரம், கழிவுநீர் மேலாண்மை, ஒன்பது ஏக்கரில் பூங்கா உள்ளது. 1.5 முதல் 7 சென்ட் வரை மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளில் இந்நகரம் உருவாகி விடும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக சுகிசிவம் பங்கேற்று பேசினார். உண்ணாமலை புரமோட்டர்ஸ் இயக்குனர்கள் ராஜேஸ்வரி, நவீன், கிருத்திகா, ரமணி சங்கர் அசோசியேட்ஸ் பொன்னுசாமி, சிவகுமார் பங்கேற்றனர்.