/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காருண்யா நிகர்நிலை பல்கலை 31வது பட்டமளிப்பு விழா
/
காருண்யா நிகர்நிலை பல்கலை 31வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 13, 2025 05:49 AM

தொண்டாமுத்தூர் : நல்லூர்வயலில் உள்ள காருண்யா நிகர் நிலை பல்கலையில், 31வது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கத்தில் நேற்று நடந்தது. துணைவேந்தர் பிரின்ஸ் அருள்ராஜ் வரவேற்புரையாற்றினார்.
காருண்யா நிகர்நிலை பல்கலை., வேந்தர் பால் தினகரன் தலைமை வகித்து, மாணவர்களுக்கு பட்டமளித்தார். 1,968 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
இவ்விழாவில், மிசோரம் மாநில முதல்வர் லால்துஹோமா மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். முன்னதாக, காருண்யா நிகர் நிலை பல்கலை சார்பில், மிசோரம் மாநிலத்தின் முதல்வர் லால்துஹோமாவின், சேவைகளை பாராட்டி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், மிசோரம் மாநில முதல்வர் லால்துஹோமா பேசுகையில், குறிக்கோள் இல்லாத வாழ்வு அர்த்தமற்றது. உங்கள் குறிக்கோளை கண்டுபிடியுங்கள். அது உங்கள் லட்சியங்களை வடிவமைக்கும்.
உலகிற்கு இன்ஜினியர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மேலாளர்கள் தேவை. ஆனால் அதைவிட, கருணை, இரக்கம் கொண்டவர்கள் முக்கியமாக தேவை. நீங்கள் கற்ற கல்வி உங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, தேசத்தின் சிக்கல்களை மாற்றுவதற்கான கருவியாகவும் இருக்கட்டும்,என்றார்.

