/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.பி.ஐ., அதிகாரி போல பேசி பணம் மோசடி: கேரள நபர் கைது ; கோவை போலீசார் அதிரடி

ADDED : நவ 21, 2024 09:50 PM

கோவை; கோவையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் மொபைல் போன் எண்ணில் அழைத்த மோசடி நபர்கள், 'உங்களுக்கு வந்துள்ள பார்சலில் சட்ட விரோத பொருட்கள் இருக்கின்றன. மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் வீடியோ காலில் அழைத்து விசாரணை மேற்கொள்வர்' என கூறினர்.
அதுபோல, 'வாட்ஸாப் வீடியோ' அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'நான், சி.பி.ஐ., அதிகாரி. வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்புங்கள்; ஆய்வுக்கு பின், பணத்தை திருப்பி தந்து விடுவோம்' என்றார்.
அதை உண்மை என நம்பிய கோவை நபர், தன்னிடம் இருந்த, 7 லட்சம் ரூபாயை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன் பின், அவரது பணம் திரும்ப கிடைக்கவில்லை.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கோவை நபர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், கோவை நபரை ஏமாற்றியது, கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அமீர் அலி, 22, என்பதை கண்டறிந்தனர். அதையடுத்து, கோழிக்கோடு சென்ற போலீசார், அமீர் அலியை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.