ADDED : ஆக 25, 2026 04:51 PM
கோவை: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ‘எனது இளைய இந்தியா ’ சார்பில், ‘கேலோ இந்தியா சம்வாத்’ எனும் பிரதமருடன் இந்திய விளையாட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
அண்ணா பல்கலை மண்டல வளாகம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாணவர்கள், இளைஞர்கள், ‘எனது இளைய இந்தியா’ தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் காணொலி உரை, தேசிய நேரலை ஒளிபரப்பு வாயிலாக இரு மையங்களிலும் ஒளிபரப்பப்படுகிறது.
தொடர்ந்து, உள்ளூர் விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விளையாட்டு, திறன் மேம்பாடு, தன்னார்வப் பணி, இளைஞர் மேம்பாடு தொடர்பான தங்களது கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை இளைஞர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
