/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.,பெற்றது 'டிலாய்ட்' கவுரவ விருது
/
கே.எம்.சி.எச்.,பெற்றது 'டிலாய்ட்' கவுரவ விருது
ADDED : நவ 05, 2025 11:05 PM

கோவை: உலகளவில் மிகப்பெரிய தொழில்முறை சேவை நிறுவனங்களில் முதன்மையான டிலாய்ட், உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தணிக்கை, மேலாண்மை ஆலோசனை உள்ளிட்ட சேவைகளை, வழங்கி வருகிறது.
மும்பையில் நடந்த விழாவில் டிலாய்ட் நிறுவனம் வழங்கிய மிகவும் மதிப்புமிக்க, 'சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள், நடுவர் சிறப்புக் கவுரவ விருதை' கே.எம்.சி.எச்., பெற்றுள்ளது.
இந்த சிறப்பு கவுரவத்தைப் பெறும், முதல் இந்திய மருத்துவமனை கே.எம்.சி.எச்., என்பது குறிப்பிடத்தக்கது. கே.எம்.சி.எச்., செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி மற்றும் தலைமை செயல் அதிகாரி சிவக்குமாரன் விருதை பெற்றுக்கொண்டனர்.
கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி பேசுகையில், ''இந்த உயரிய அங்கீகாரம், நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டுத் திறமைக்கான ஒரு உலகளாவிய தரநிலை. ஒவ்வொரு ஊழியரின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரம். மேலும் சிறப்பான முறையில் செயல்பட எங்களுக்கு ஊக்கமளிப்பதாய் உள்ளது, '' என்றார்.

