/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்., சார்பில் வயிற்று நோய் கருத்தரங்கு
/
கே.எம்.சி.எச்., சார்பில் வயிற்று நோய் கருத்தரங்கு
ADDED : பிப் 16, 2025 11:59 PM

கோவை; கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில், தர்மபுரியிலுள்ள ஹோட்டல் சந்திரா ரெசிடென்சியில், 'கேஸ்ட்ரோஹெப்கான்' என்ற பெயரில் இரைப்பை குடல், கல்லீரல், மற்றும் பித்தப்பை நோய்கள், சிகிச்சைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் அமுதவள்ளி, கருத்தரங்கை துவக்கி வைத்தார்.இக்கருத்தரங்கில், டாக்டர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் சேவைக்கான நடைமுறையில் உள்ள சவால்கள், மருத்துவ சேவை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர். நிபுணர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
கே.எம்.சி.எச்., தலைவர் நல்லா பழனிசாமி, நிர்வாக இயக்குனர் அருண், துறை சார்ந்த வல்லுநர்கள், நிபுணர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.