/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓ.ஆர்.எஸ்., - ஓ.ஆர்.எஸ்.எல்., வித்தியாசம் தெரிந்து வாங்கணும்
/
ஓ.ஆர்.எஸ்., - ஓ.ஆர்.எஸ்.எல்., வித்தியாசம் தெரிந்து வாங்கணும்
ஓ.ஆர்.எஸ்., - ஓ.ஆர்.எஸ்.எல்., வித்தியாசம் தெரிந்து வாங்கணும்
ஓ.ஆர்.எஸ்., - ஓ.ஆர்.எஸ்.எல்., வித்தியாசம் தெரிந்து வாங்கணும்
ADDED : ஜூன் 05, 2025 01:15 AM

கோவை; மருந்துகடை உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம், நேற்று காந்திபார்க் பகுதியில் உள்ள ஹோட்டலில் நடந்தது. 50க்கும் மேற்பட்ட மருந்துகடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
இதில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
ஓ.ஆர்.எஸ்.,என்பது வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும் நீரிழப்பை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இது, உலக சுகாதார மையம் பரிந்துரைத்த அளவில் சர்க்கரை, சோடியம், பொட்டாசியம், தண்ணீர் கலந்து இருக்கும்.
ஓ.ஆர்.எஸ்.எல்., என்பது ஒரு வணிகபானம். அதிக சர்க்கரை, சுவை சேர்க்கை மற்றும் பிற சேர்மங்கள் கொண்டுள்ளது. வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்புக்கு, இதை பயன்படுத்த இயலாது. இதை பயன்படுத்துவதால், வயிற்றுபோக்கை மேலும் அதிகப்படுத்தலாம். இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.
நீரிழப்பு ஏற்பட்டால், உலக சுகாதார மையம் பரிந்துரைத்த ஓ.ஆர்.எஸ்., மட்டுமே பயன்படுத்த வேண்டும். லேபிளை படித்து பார்த்து வாங்க வேண்டும்.
ஓ.ஆர்.எஸ்., கேட்டு வருபவர்களிடம், சரியான பொருளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களும் பார்த்து வாங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், மருந்து கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்கள், மருந்துக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.