/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோ 32, கே 12 ரக சோள விதைகள் வறட்சியிலும் அதிக மகசூல் தரும்
/
கோ 32, கே 12 ரக சோள விதைகள் வறட்சியிலும் அதிக மகசூல் தரும்
கோ 32, கே 12 ரக சோள விதைகள் வறட்சியிலும் அதிக மகசூல் தரும்
கோ 32, கே 12 ரக சோள விதைகள் வறட்சியிலும் அதிக மகசூல் தரும்
ADDED : ஏப் 29, 2025 11:23 PM

சூலுார்; கோ 32 மற்றும் கே 12 ரக சோள விதைகள் வறட்சியிலும் அதிக மகசூல் தருவதால், அவற்றை பயிரிட்டு விவசாயிகள் பயனடையலாம், என, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை உதவி இயக்குனர் மாரிமுத்து கூறினார்.
வேளாண்துறை சார்பில், சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரத்தில், 25 எக்டரில், சோள ரகங்களான, கோ 32 மற்றும் கே 12 விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விதைப் பண்ணைகளில், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார். விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி அலுவலர் பெரிய கருப்பன் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப்பின் உதவி இயக்குனர் கூறியதாவது:
சித்திரை பட்டத்தில் ஏராளமான விவசாயிகள் சோளம் பயிரிட்டுள்ளனர். தானியமாகவும், தீவன பயிராகவும் இருப்பதால், சித்திரை பட்டத்தை விவசாயிகள் தவற விடுவதில்லை. சோள ரக விதைகளான கோ 32, கே 12 ஆகியவை ஏக்கருக்கு, 1.5 மெ.டன் முதல், 1.8 மெ.டன் மகசூல் தரக்கூடியவை. வறட்சியிலும் அதிக மகசூல் தரும் இந்த ரக விதைகள் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
விவசாயிகளுக்கு விநியோகிக்க, சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரத்தில், 25 எக்டரில், மேற்கண்ட ரகங்களின் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதைச்சான்று துறையின் பல கட்ட ஆய்வுக்குப்பின் அரசு விதைச்சான்று அட்டையுடன் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. வரும் ஜூன் மாதத்துக்குள், 28 மெட்ரிக் டன் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, வரும் ஆடிப்பட்டம் மற்றும் புரட்டாசி பட்டத்தில், விதைக்கும் வகையில் இரு சோள ரக விதைகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

