sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொப்பரை விலை தொடர் சரிவு

/

கொப்பரை விலை தொடர் சரிவு

கொப்பரை விலை தொடர் சரிவு

கொப்பரை விலை தொடர் சரிவு


ADDED : ஆக 28, 2011 12:37 AM

Google News

ADDED : ஆக 28, 2011 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : வெளிமார்க்கெட்டில், கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வருவதால், தென்னை விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.காங்கேயம் மார்க்கெட்டில், கடந்த 20ம் தேதி நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 59 ரூபாய் கிடைத்தது.

தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,330, தேங்காய் பவுடர் கிலோவுக்கு 87 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகள் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு 16 ஆயிரத்து 500, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் இருந்து சென்னை உட்பட பகுதிகளுக்கு அனுப்பும் தேங்காய் டன்னுக்கு 16 ஆயிரம், விவசாயிகள் சொந்தப் பொறுப்பில் பறித்து இருப்பு வைத்திருக்கும் தேங்காய்க்கு 10, வியாபாரிகள் பறித்துக் கொள்ள தேங்காய்க்கு 9 ரூபாய் கிடைத்தது.நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 57.50 - 58.50 ரூபாய் கிடைத்தது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,275, தேங்காய் பவுடர் கிலோவுக்கு 85 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகள் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு 16 ஆயிரம், சென்னை உட்பட பிற பகுதிகளுக்கு அனுப்பும் உணவுத் தேவைக்கான தேங்காய் டன்னுக்கு 15 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. தோப்பில் பறித்து வைத்துள்ள தேங்காய் மற்றும் வியாபாரிகளே பறித்துக் கொள்வதற்கான தேங்காய் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'கடந்த இரு வாரங்களாக கொப்பரை விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. தேங்காய் சீசன் முடிந்துள்ள நிலையில் விலையில் சரிவு ஏற்பட்டதால், மார்க்கெட் ஸ்தம்பித்துள்ளது; விவசாயிகள் தேங்காய் பறிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்' என்றனர்.தென்னை விவசாயிகள் கூறுகையில், 'கடந்த மார்ச் - ஜூலை வரையிலும், தேங்காய் சீசன் இருந்த காலத்தில் விலை ஒரே நிலையில் இருந்தது. தற்போது, தேங்காய் வரத்து குறைந்துள்ள நிலையில், விலையில் சரிவு ஏற்படுவது அதிர்ச்சியளிக்கிறது. தேங்காய் விலை சரிவை தடுக்க, கொப்பரைக்கான ஆதரவு விலை, கிலோவுக்கு 60 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும்' என்றனர்






      Dinamalar
      Follow us