sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உள்ளாட்சி தேர்தல்களுக்கு இணையதளம் அறிமுகம்

/

உள்ளாட்சி தேர்தல்களுக்கு இணையதளம் அறிமுகம்

உள்ளாட்சி தேர்தல்களுக்கு இணையதளம் அறிமுகம்

உள்ளாட்சி தேர்தல்களுக்கு இணையதளம் அறிமுகம்


ADDED : அக் 09, 2011 01:42 AM

Google News

ADDED : அக் 09, 2011 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : முதன்முறையாக உள்ளாட்சி தேர்தல்களுக்கு இணையதளம் முறையில் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்க பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கருணாகரன் அறிக்கை:கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், மூன்றாம்நிலை நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தல்கள் வரும் 17ம் தேதி , 19ம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது.முதன்முறையாக உள்ளாட்சி தேர்தல்களுக்கு 'ஆன்லைன்' இணையதளம் முறையில் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கெ õண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான கூடுதல் தகவல்கள் வார்டு எண், தெரு பெயர், கதவிலக்கத்துடன் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தை சார்ந்தவர், ஒரே கதவிலக்கத்தின் கீழ் வருவது இவ்வாக்காளர் பட்டியலின் தனிச்சிறப்பம்சமாகும்.இந்த உள்ளாட்சி தேர்தல்களில் 22 இலட்சத்து 87 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வலைதளத்தில் 'உங்கள் ஓட்டு சாவடியை அறிய' என்ற தலைப்பில் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு எண் மற்றும் வாக்குச்சாவடி தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் எண், பாகம் எண், பெயர், தந்தை/ கணவர் பெயர், பாலினம், ஓட்டளிக்க வேண்டிய வாக்குசாவடியின் பெயர் ஆகிய விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய ஏற்பாட்டினை தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில், முதன்முறையாக மாநில தேர்தல் ஆணையத்தால் தேசிய தகவல் மைய ஒருங்கிணைப்புடன் குறுகிய காலத்தில் செம்மையாக செய்யப்பட்டுள்ளது.இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us