/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., பிரியாணி உணவகம் திறப்பு
/
கே.பி.ஆர்., பிரியாணி உணவகம் திறப்பு
ADDED : மார் 31, 2025 09:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில், நிவேதாஸ் இன் சார்பு நிறுவனமாக, கே.பி.ஆர்., பிரியாணி அசைவ உணவகம் நேற்று திறக்கப்பட்டது. உரிமையாளர் காளியாயி என்கிற ராமசாமி, பழனியம்மாள், பங்குதாரர்கள் பழனிசாமி, ஈஸ்வரன் ஆகியோர், குத்துவிளக்கேற்றி உணவகத்தை திறந்து வைத்தனர்.
உணவகத்தில் அனைத்து விதமான பிரியாணி மற்றும் மட்டன், சிக்கன், ஒரிஜினல் நாட்டுக்கோழி, மீன், தந்துாரி வகைகள், கிரில் சிக்கன், சைனீஸ், சான்ட்விச் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும். அனைத்து வகையான உணவுகளும், சுகாதார முறையிலும் வீட்டு சமையல் முறைப்படி ஆர்டரின் பெயரில் மொத்தமாகவும் கிடைக்கும், என, உணவக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

