/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வியாளர்களை கவுரவித்த கே.பி.ஆர்.,
/
கல்வியாளர்களை கவுரவித்த கே.பி.ஆர்.,
ADDED : மே 24, 2025 11:36 PM

கோவை: பொறியியல், தொழில் மேலாண்மை, கலை மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கும் வகையில், கே.பி.ஆர்., கல்வி நிறுவனங்கள் சார்பில், 'கே.பி.ஆர், லெகஸி விருதுகள் 2025' வழங்கும் விழாவினை நடத்தியது. கே.பி.ஆர்., குழுமத்தின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.
ஏ.ஐ.சி.டி.இ., தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி அனுவதினி மற்றும் தலைமை செயல் அதிகாரி புத்த சந்திரசேகர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் சிறந்த கல்வியாளர், பேராசிரியர், ஆராய்ச்சியாளர், சிறந்த முன்னாள் மாணவர், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில், இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, 13 கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். கேடயமும் ரூ 25,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின் கட்டட பொறியியல் பேராசிரியர் ராஜசேகரனுக்கு வழங்கப்பட்டது. விருதுடன் ரூ.ஒரு லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.