/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி 21வது பட்டமளிப்பு விழா
/
கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி 21வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 06, 2024 10:55 PM

போத்தனூர்;கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின், 21வது பட்டமளிப்பு விழா நடந்தது,
சுகுணாபுரத்திலுள்ள கல்லூரி அரங்கில் நடந்த விழாவுக்கு. கிருஷ்ணா கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார். டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவன கல்வி இடைமுக திட்ட பிராந்திய தலைவர் கணேஷ் திருநாவுக்கரசு பேசுகையில், ஒவ்வொருவருக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகள் இருக்கும். அதனை பயன்படுத்தி வாழ்நாள் முழுவதும் கற்பதில் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் பதிவிடும்போது கவனம் வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, பல்கலை தரவரிசையில் இடம் பிடித்த, 33 பேர் உட்பட, ஆயிரத்து, 237 பேருக்கு பட்ட சான்றிதழை அவர் வழங்கினார்.
முதல்வர் ஜேனட், கிருஷ்ணா கல்வி குழும முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், கல்வி குழும கல்லூரிகளின் முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.