/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்சயா அகாடமியில் கிருஷ்ண ஜெயந்தி
/
அக்சயா அகாடமியில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED : ஆக 20, 2025 09:56 PM

கோவை; பன்னீர்மடையில் இயங்கும் அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மழலையர் பிரிவு மாணவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கலந்துகொண்டனர். அம்மாக்கள் யசோதைகளாகவும், மாணவர்கள் கிருஷ்ணராகவும் நடனமாடி, அணிவகுத்துச் சென்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
ஆடல், பாடல் போன்ற கலைநிகழ்வுகள், உறியடி, கயிறு இழுத்தல், புதையல் வேட்டை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, ஊக்குவிக்கப்பட்டனர்.
பள்ளி நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராம், முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

