/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறநகர் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
புறநகர் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 17, 2025 10:31 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் நகர விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், பதினோராம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. நகர தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். விஜயா, சாந்தி குத்துவிளக்கு ஏற்றினர். சரோஜினி, மாநில செயலாளர் லட்சுமண நாராயணன் உள்பட பலர் பேசினர்.
கோ -ஆப்ரேட்டிவ் காலனியில் இருந்து குழந்தைகளின் ஊர்வலம் துவங்கியது. காரமடை, ஊட்டி சாலைகள் வழியாக, பேட்டை மாரியம்மன் கோவிலை அடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து பங்கேற்றனர். விழாவில் காய்கறி மண்டிகள் வர்த்தக சபை தலைவர் பாபு உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். நகர பொது செயலாளர் கஸ்தூரி நன்றி கூறினார். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறுமுகை தியேட்டர் மேட்டில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவை மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் முத்துசாமி வரவேற்றார். ஓதிமலை சிவனேச அடிகளார் சிறப்பு பூஜை செய்து, ஆசியுரை வழங்கினார். பா.ஜ., வடக்கு மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், ராமலிங்கம், அன்னபூரணி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
சூலுார் ஒன்றிய விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஸ்தாபன தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா, இருகூர், கருமத்தம்பட்டி, கரவழி மாதப்பூர் பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
நடுப்பாளையம் ஆதி விநாயகர் கோவிலில், நாக சுந்தரம் குழுவினரின் சிலம்பாட்டத்துடன் துவங்கியது. கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகளின் ஊர்வலத்தை கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். ஸ்தாபன தின விழா, பரிசளிப்பு விழாவில் மூர்த்தி லிங்க சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் சேவா பிரமுகர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய நிர்வாகி அசோக்குமார், மாவட்ட இணை செயலாளர் தியாகராஜன், மாநில தர்ம பிரசார பிரமுகர் சுந்தரமூர்த்தி, சமூக சேவகர் ராமநாதன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பேசினர்.
ஒன்றிய நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, செந்தில்குமார் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.