/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிருஷ்ண ஜெயந்தி; கோவில்களில் கோலாகலம்
/
கிருஷ்ண ஜெயந்தி; கோவில்களில் கோலாகலம்
ADDED : ஆக 13, 2025 08:26 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா வரும், 16ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி எஸ்.எஸ்.கோவில் வீதி விஷ்ணுபஜனை கோவிலில், கோகுலாஷ்டமி உறியடி உற்சவ விழா வரும், 16ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 7:00 மணிக்கு கோ பூஜை, ேஹாமம், அபிேஷக ஆராதனை, மாலை, 5:00 மணிக்கு பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை, இரவு, 7:00 மணிக்கு உறியடி உற்சவம் நடக்கிறது.
* குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 16ம் தேதி காலை, 7:00 மணிக்கு சிறப்பு அஷ்டாபிேஷகம், 9:00 மணிக்கு 108 கோ பூஜை, மஹா தீபாராதனை நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு விஷ்ணு பஜனை கோவில் குழுவினரின் திருப்பல்லாண்டு, திருப்பாவை பாராயணம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு உறியடி விழா, ஹரிகந்த ஸ்ருதி பஜனை குழுவினரின் சிறப்பு பஜனை நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு சாயரட்சை மஹா தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 9:00 மணிக்கு ஹரிவராசனம், நடை சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.
* ஆனைமலை கிருஷ்ண ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவலம்புரி சித்தி, புத்தி விநாயகர், ராகு,கேது, சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், தன்வந்திரி, தசாவதார கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வரும், 16ம் தேதி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு அன்னவாகனத்தில் வீதி உலா, 6:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, அலங்காரம், இரவு, 7:45 மணிக்கு தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது.
மாலை, 6:00 மணிக்கு கீதையின் கண்ணன் என்ற தலைப்பில், பூஜ்யஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி சுவாமிகளின் சொற்பொழிவு நடக்கிறது.
*உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோட்டமங்கலம் நேஷனல் மாடல் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார். மாணவர்கள் கிருஷ்ணன், ராதையாக வேடமிட்டு, நடனமாடினர். பள்ளி ஆசிரியர்கள், பார்வையாளர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.