ADDED : செப் 15, 2025 10:29 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கோவிலில் கிருஷ்ணர், பாமா, ருக்மணியுடன் காளிங்க நர்த்தன அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் காலை, 5:00 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அபிஷேக பூஜைகளும் மதியம், 12:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. மேலும், இங்குள்ள செல்வ விநாயகர், உலகளந்த பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
மாலை உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். மாலை கிருஷ்ணர் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழு, இறை வழிபாடு மற்றும் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து இருந்தனர்.