/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனத்தில் கொண்டு வந்து கழிவு குவிப்பு மாசுபடுகிறது கிருஷ்ணா குளம்
/
வாகனத்தில் கொண்டு வந்து கழிவு குவிப்பு மாசுபடுகிறது கிருஷ்ணா குளம்
வாகனத்தில் கொண்டு வந்து கழிவு குவிப்பு மாசுபடுகிறது கிருஷ்ணா குளம்
வாகனத்தில் கொண்டு வந்து கழிவு குவிப்பு மாசுபடுகிறது கிருஷ்ணா குளம்
ADDED : நவ 22, 2024 11:06 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் குப்பை கொட்டக்கூடாது என்ற எச்சரிக்கையை மீறி, ஒரு சிலர் வாகனங்களில் கொண்டு வந்து, குப்பையை கொட்டிச் செல்வது வாடிக்கையாகியுள்ளது.
பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் தேங்கும் நீர், பல கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், கிராமங்களில் பாசன நீராகவும் பயன்படுகிறது. இந்நிலையில், இந்த குளத்தின் அருகே குப்பையை வீசக்கூடாது என பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதையும் மீறி, குப்பையை வீசிச் செல்வதால், சுகாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. கடந்த வாரம் காலாவதியான உணவு பொருட்களை மூட்டை, மூட்டையாக வீசிச் சென்றனர்.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக அந்த கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், இங்கு குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
விழிப்புணர்வு, எச்சரிக்கை விடுத்தாலும் ஒருசிலர் கழிவுகளை கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர், கிருஷ்ணா குளத்தில் மூட்டை மூட்டையாக கழிவை வீசி விட்டு, எதுவும் தெரியாத நபர் போல சென்றார்.
இதுபோன்று கழிவுகளை வீசுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கிருஷ்ணா குளம் மற்றும், பி.ஏ.பி., கால்வாய் பகுதிகளில், நீர்நிலைகள் பாதுகாக்க வேண்டும், கழிவு கொட்டக்கூடாது, கழிவு கொட்டினால் அபராதம் விதிக்கப்படுமென, எச்சரிக்கை பலகைகள் பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் நீர்நிலைகள் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால், ஒரு சில கடைக்காரர்கள், முறையாக கழிவுகளை தரம் பிரித்து கொடுக்காமல் கழிவுகளை பொறுப்பின்றி நீர்நிலைகளில் வீசிச் செல்கின்றனர். இதை கட்டுப்படுத்த அதிகாரிகள், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கழிவுகளை கொட்டுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.