குப்பையை வெளியே வைத்திருந்த குடோனுக்கு ரூ.2,000 அபராதம்
குப்பையை வெளியே வைத்திருந்த குடோனுக்கு ரூ.2,000 அபராதம்
UPDATED : நவ 06, 2026 07:41 PM
ADDED : நவ 06, 2026 06:56 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விதிப்படி குப்பைகளை முறையாக பிரித்து வழங்குவதை உறுதி செய்ய நகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 16 -வது வார்டுக்குட்பட்ட நியூ எக்ஸ்டென்சன் தெருவில், சுகாதாரத்துறை ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான குழு, அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அரசு அறிவித்தவாறு குப்பைகள் நான்கு வகைகளாக பிரித்து வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
அங்கிருந்த ஒரு குடோனின் வெளியே குப்பைகளை சாக்குகளில் கட்டி, மக்களுக்கு இடையூறாகவும் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. குடோன் உரிமையாளரின் இந்த அலட்சிய போக்கை கண்டித்த அதிகாரிகள், ரூ. 2,000 அபராதம் விதித்து ரசீது வழங்கினர்.
