தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பைகளை தரம் பிரித்து கொடுப்போருக்கு பாராட்டு

குப்பைகளை தரம் பிரித்து கொடுப்போருக்கு பாராட்டு

குப்பைகளை தரம் பிரித்து கொடுப்போருக்கு பாராட்டு


UPDATED : நவ 20, 2026 07:50 PM

ADDED : நவ 20, 2026 07:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 07:50 PM ADDED : நவ 20, 2026 07:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை, நான்கு வகைகளாக தரம் பிரித்து, கொட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பலர் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை, மொத்தமாக தூய்மை பணியாளர்களிடம் கொட்டி வருகின்றனர். சிலர் குப்பைகளை தரம் பிரித்து வழங்குகின்றனர். இவர்களை பாராட்டும் விதமாக வீட்டின் கேட்டில் பாராட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் பால்ராஜ் கூறியதாவது: பொது மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்பு கழிவு என நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். அவ்வாறு தரம் பிரித்து கொடுக்கும் நபர்களை பாராட்டும் விதமாக, அவர்கள் வீட்டு கேட்டில் பாராட்டு ஸ்டிக்கர் ஒட்டுகிறோம். மக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்து, தங்கள் வீட்டின் கேட்டில் பாராட்டு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us