/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகுதி நேர ரேஷன் கடை வேண்டும்; குளத்துப்பாளையம் மக்கள் மனு
/
பகுதி நேர ரேஷன் கடை வேண்டும்; குளத்துப்பாளையம் மக்கள் மனு
பகுதி நேர ரேஷன் கடை வேண்டும்; குளத்துப்பாளையம் மக்கள் மனு
பகுதி நேர ரேஷன் கடை வேண்டும்; குளத்துப்பாளையம் மக்கள் மனு
ADDED : ஜன 08, 2024 10:56 PM
கருமத்தம்பட்டி;'தங்கள் ஊரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும்,' என, குளத்துப் பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது குளத்துப் பாளையம். இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ரேஷன் பொருட்கள் வாங்க, 3 கி.மீ.,தூரத்தில் உள்ள கிட்டாம்பாளையம் ரேஷன் கடைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. அதனால், பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,' எங்கள் ஊரில் வசிக்கும் பெருமாபாலான மக்கள் கூலி வேலைக்கு செல்கிறோம். ரேஷன் பொருட்கள் வாங்க கிட்டாம்பாளையம் செல்ல வேண்டி உள்ளது. அதற்காக ஒரு நாள் வேலைக்கு லீவு போட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால், பொருட்களை வாங்க முடிவதில்லை. மறுநாளும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், வருமானம் பாதிக்கப்படுகிறது. பஸ் வசதி இல்லாததால், பெண்கள் நடந்து சென்று தான் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. அதனால், எங்கள் ஊரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ''குளத்துப்பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு வட்ட வழங்கல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடை அமைக்க தேவையான அனைத்து வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து தர தயாராக உள்ளது,'' என்றார்.