UPDATED : நவ 16, 2026 12:00 AM
ADDED : நவ 15, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
கோவை: ராம் நகர் ஸ்ரீ ராமர் கோயிலில் குமாரபோஜனம் மற்றும் பராபவ ஆண்டு கந்த சஷ்டி மஹோத்சவம் நடந்தது.
காலை 6 மணிக்கு சந்தியாவந்தனம், ஸமிதாதானம், யக்ஞோபவீத தாரணம் நடந்தது. காலை 8 மணிக்கு சத்ருசம்ஹர த்ரிஷதி சண்முக அர்ச்சனை, மஹா தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடந்தது.முக்கிய நிகழ்வான குமாரபோஜனம் காலை 10.30 மணிக்கு நடந்தது. உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும், குமாரபோஜனம் நடந்தது.
