UPDATED : நவ 16, 2026 12:00 AM
ADDED : நவ 15, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை தாவர நோயியல் துறை சார்பில், காளான் விதை உற்பத்தி (ஸ்பான்) மற்றும் காளான் சாகுபடி குறித்த மூன்று நாள் பயிற்சி, வரும் 30ம்தேதி முதல் டிச., 2ம் தேதி வரை நடக்கிறது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். பயிற்சிக் கட்டணமாக 5,370 ரூபாய் செலுத்த வேண்டும். நேரடியாக பணமாகவோ அல்லது வங்கி பரிவர்த்தனை மூலமாகவோ கட்டணம் செலுத்தலாம்.
மேலும் விபரங்களுக்கு 0422–6611336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
