/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமந்தராயர் கோவிலில் நேற்று கும்பாபிேஷகம்
/
அனுமந்தராயர் கோவிலில் நேற்று கும்பாபிேஷகம்
ADDED : மார் 01, 2024 11:22 PM

ஆனைமலை;ஆனைமலை அருகே, அனுமந்தராயர் கோவிலில் நேற்று மஹா கும்பாபிேஷக விழா நடந்தது.
ஆனைமலை அனுமந்தராயர் கோவில், வலம்புரி சித்தி புத்தி விநாயகர், ராகு, கேது, ஸ்ரீ யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில், அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷக விழா நேற்று முன்தினம் துவங்கியது.
நேற்றுமுன்தினம் காலை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், யாக சாலை கலச பூஜைகள், ேஹாமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை, 7:30 மணிக்கு பிரதிஷ்ட ேஹாமங்கள், பிராண பிரதிஷ்டை, மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் மஹா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

