/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்வ விநாயகர் கோவிலில் வரும் 10ல் கும்பாபிேஷகம்
/
செல்வ விநாயகர் கோவிலில் வரும் 10ல் கும்பாபிேஷகம்
ADDED : பிப் 05, 2025 11:17 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சி.கருமாண்டவுக்கவுண்டனுார் செல்வ விநாயகர் கோவிலில் வரும், 10ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே, சி.கருமாண்டக்கவுண்டனுார் செல்வ விநாயகர், மணியாச்சியம்மன், முருகன், வள்ளி, தெய்வானை சமேத பரிவார தெய்வங்களுக்கு ஆலய நுாதன அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷக விழா, வரும், 8ம் தேதி காலை, 9:00 மணிக்கு முளைப்பாலிகை வழிபாடுடன் துவங்குகிறது. காலை, 10:45 மணிக்கு முதல்கால பூஜை, மாலை, 6:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடக்கிறது.
வரும், 9ம் தேதி காலை, 8:00 மணிக்கு மூன்றாம் காலம், மாலை, 5:00 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடக்கின்றன.10ம் தேதி ஐந்தாம் கால பூஜைகள், காலை, 6:00 மணிக்குமேல், 7:30மணிக்குள் செல்வவிநாயகர், கன்னிமூல கணபதி, கல்யாண சுப்ரமணியர் சமேத பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.
அதன்பின், காலை,9:15 மணிக்கு மணியாச்சி அம்மன், ஆதிவிநாயகர், ஆதிபாலமுருகன் கோவில் கோபுர விமான கும்பாபிேஷகம் நடக்கிறது. மஹா அபிேஷகம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.