sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிேஷகம்

/

காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிேஷகம்

காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிேஷகம்

காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிேஷகம்


ADDED : ஏப் 29, 2025 09:19 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ஆத்துப்பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவிலில் வரும், 4ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.

பொள்ளாச்சி அருகே ஆத்துப்பொள்ளாச்சி காமாட்சி அம்மன், பெருமாள்சுவாமி கோவிலில் கும்பாபிேஷக விழா வரும், மே 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு ஊர் பொதுமக்கள் தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

வரும், 3ம் தேதி மாலை, 4:00 மணிக்கு மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மண்ணெடுத்தல், முளையிடுதல், காப்பணிதல் வழிபாடு நடக்கிறது.அன்று மாலை, 5:00 மணிக்கு மூலமூர்திகள் திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளல், முதற்கால வேள்வி; பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் உள்ளிட்ட பூஜைகளும்; பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

வரும், 4ம் தேதி காலை, 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, மூலமூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிதல் வழிபாடு, இரண்டாம் கால வேள்வியும், காலை, 7:00 மணிக்கு நாடி சந்தானம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடக்கிறது.

காலை, 8:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்படுதல், காலை, 8:30 மணிக்கு விமான கும்பாபிேஷகம், அதன்பின், காமாட்சியம்மனுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.காலை, 9:00 மணிக்கு அன்னதானம், காலை, 11:00 மணிக்கு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us