ADDED : அக் 11, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : காரமடையில் வசித்து வரும் 5 வயது சிறுமி, தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, காரமடையை சேர்ந்த கூலி தொழிலாளி பத்ரசாமி, 45, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தார்.
இதனால் பயந்து போன சிறுமி, அவரிடம் இருந்து தப்பித்து ஓடி, வீட்டிற்கு சென்று, பெற்றோரிடம், தனக்கு நடந்ததை தெரிவித்தார். பின், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார், பத்ரசாமியை, போக்சோவில் கைது செய்தனர்.

