/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா பக்தர்களுக்கு லட்டு தயாரிப்பு தீவிரம்
/
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா பக்தர்களுக்கு லட்டு தயாரிப்பு தீவிரம்
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா பக்தர்களுக்கு லட்டு தயாரிப்பு தீவிரம்
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா பக்தர்களுக்கு லட்டு தயாரிப்பு தீவிரம்
ADDED : ஜன 08, 2025 11:04 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நாளை வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 10ம் தேதி நடக்கிறது. விழா இன்று (9ம் தேதி) துவங்குகிறது.
விழாவையொட்டி, மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 6:00 மணி முதல் மூலவர், முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இன்று முதல், 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்தில் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது.
நாளை (10ம் தேதி) அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
சொர்க்கவாசலில் கட்டுவதற்கு காய், கனிகள், திரவிய பொருட்கள் அனைத்தும் இன்று (9ம் தேதி) காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கோவிலில் வழங்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை (10ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி இன்று காலை, 10:31 மணிக்கு திருமஞ்சன சேவை, அலங்கார சேவை நடைபெறுகிறது.
நாளை (10ம் தேதி) அதிகாலை, 4:50 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, சிறப்பு அலங்காரம், பூஜைகள், மஹா தீபாராதனை, தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 11ம் தேதி மதியம், 12:31 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, அன்ன பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, நாளை (10ம் தேதி) காலை, 4:00 மணிக்கு கோவில் பிரகாரத்தில், உற்சவர் புறப்பாடுடன் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாளை அதிகாலை 4:00 மணி முதல் மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம் மற்றும் காலை, 5:00 மணிக்கு வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த பிரசாதம் வழங்கப்படும்.
லட்டு தயாரிப்பு தீவிரம்
பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பக்தர்களுக்கு வழங்க லட்டு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம், 15 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பில் கோவில் நிர்வாகம், லட்சுமி நரசிம்மர் சேவா சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

