/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்பாளையத்தில் திருவிளக்கு வழிபாடு
/
கோவில்பாளையத்தில் திருவிளக்கு வழிபாடு
ADDED : ஆக 09, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளைய : கோவில்பாளையம் அருகே நஞ்சுண்டாபுரம் புதூரில், பழமையான விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளியன்றும், சிறப்பு வழிபாடு நடக்கிறது.
பவுர்ணமி மற்றும் வரலட்சுமி நோன்பினை முன்னிட்டு, நேற்று முன்தினம் திருவிளக்கு வழிபாடு நடந்தது. 200க்கு மேற்பட்ட பெண்கள், அம்மனை வழிபட்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் மங்கையர்க்கரசி, பத்மாவதி ஆகியோர் ஏற்பாடுகளை கவனித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

