/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராம்ராஜ் காட்டன் ஷோரூம் சரவணம்பட்டியில் துவக்கம்
/
ராம்ராஜ் காட்டன் ஷோரூம் சரவணம்பட்டியில் துவக்கம்
ADDED : அக் 25, 2024 10:23 PM

கோவை: கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தில், ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது.
ராம்ராஜ் காட்டனின் வேட்டி, சர்ட்டுகள், பனியன்கள் உள்ளிட்டவை, அதன் ஷோரூம்களில் மட்டுமின்றி, முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் கிடைக்கின்றன. இந்நிலையில், கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில், டி.வி.எஸ்., ஷோரூம் எதிரில், புதிய ஷோரூம் திறப்பு விழா, நேற்று நடந்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வரவேற்றார். ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி தலைவர் தங்கவேலு, ஷோரூமை திறந்து வைத்தார்.
செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார், முதல் விற்பனையை துவக்கி வைக்க, டேனி ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் சிவராமன் கந்தசாமி பெற்றுக் கொண்டார். இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின் உட்பட பலர் பங்கேற்றனர்.