/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்பந்து சங்கத்திற்கு இணையதளம் துவக்கம்
/
கால்பந்து சங்கத்திற்கு இணையதளம் துவக்கம்
ADDED : ஜன 31, 2024 11:55 PM

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், சங்கத்தின் இணையதள துவக்க நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சியில், கோவை மாவட்ட தலைவர் அஜீத்குமார் லால் மோகன் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) ராஜேஸ்வரன், துவக்கி வைத்தார்.
வீரர்கள் பதிவு, புள்ளி விவரங்கள் குறித்த விபரங்களை தெரிந்துகொள்ளும் வகையில், இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெண்களை கால்பந்து விளையாட்டில் ஈடுபடுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மகளிர் கால்பந்து திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், கால்பந்து சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் ராமசாமி துணைத்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.