/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கல்வியுடன் நற்பண்பு கற்றுக் கொள்ளுங்கள்'
/
'கல்வியுடன் நற்பண்பு கற்றுக் கொள்ளுங்கள்'
ADDED : ஆக 26, 2025 10:54 PM

கோவை; அக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாமாண்டு துவக்க விழா, கல்லுாரி கலையரங்கில் நடந்தது.
ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சீனியர் எக்ஸிகியூடிவ் ஹரி கிருஷ்ணன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், குழந்தை கவிஞர் செல்ல கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஹரிகிருஷ்ணன் பேசுகையில், ''மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி ஒழுக்கம், நேர்மை, பொறுப்பு ஆகிய பண்புகளிலும் சிறந்து விளங்க வேண்டும்,'' என்றார்.
மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ பேரவை உறுப் பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக் கப்பட்டனர்.
சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது, கோவையைச் சேர்ந்த வீனஸ் ஏர் கண்டிஷனிங் ஸ்பெஷலிஸ்ட் நிறுவ னத்தின் நிர்வாக இயக்கு னர் அன்சார் பஹீருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கல்லுாரி தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பவித்ரன், அறங் காவலர் தியாகராஜன், ஆலோசகர் ஜோசப் சேவியர், தலைமை நிர்வாக அதிகாரி கபிலன், துணை முதல்வர் சிவசங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.