/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்கள் பாதுகாப்புக்கு சட்ட விழிப்புணர்வு
/
பெண்கள் பாதுகாப்புக்கு சட்ட விழிப்புணர்வு
ADDED : டிச 04, 2024 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா வரவேற்றார்.
பாரதியார் பல்கலை மகளிர் ஆய்வுத்துறை மாணவி நர்மதா பங்கேற்று, பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குளித்து விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை, பேராசிரியர்கள் ராஜலட்சுமி, கவிதா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.